×

நாக சைதன்யாவின் கஸ்டடி டீசர் வெளியானது

சென்னை: வெங்கட்பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்துள்ள ‘கஸ்டடி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ‘மன்மதலீலை’ படத்திற்கு பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு நாக சைதன்யா நடிக்கும் கஸ்டடி படத்தை இயக்குகிறார். தமிழ், தெலுங்கில் ஒநே நேரத்தில் வெளியாகும் இப்படத்தில் நாக சைதன்யா ஜோடியாக கிரித்தி ஷெட்டி நடிக்கிறார். அரவிந்த்சாமி, பிரியாமணி, சரத்குமார் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர். நிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கின்றது.

சமீபத்தில்தான் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. இந்நிலையில் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில் நாக சைதன்யா போலீஸ் அதிகாரியாகவும் அவருடன் மோதும் வில்லனாக அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர். ‘காயம்பட்ட மனசு ஒருத்தன எந்த எக்ஸ்ட்ரீமுக்கு வேணாலும் கொண்டுபோகும்’ என பின்னணி குரலுடன் இதன் டீசர் தொடங்குகிறது. இதில் ரவுடித்தனம் காட்டும் வில்லனாக அரவிந்த்சாமி நடித்திருக்கிறார். படத்தில் கிரித்தி ஷெட்டிக்கு சண்டைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் தந்து இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். வரும் மே மாதம் 12ம் தேதி படம் வெளியாகிறது. இந்த படத்துக்கு பிறகு சுதீப் நடிப்பில் பான் இந்தியா படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார். இந்த படத்துக்கு தலைப்பு வைக்கவில்லை.


Tags : Naga Chaitanya , Naga Chaitanya's Custody teaser released
× RELATED காதல் ரகசியத்தை உடைத்த நாக சைதன்யா, சோபிதா