சென்னை காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தொடர்பான சிறப்பு சோதனையில் 43 குற்றவாளிகள் கைது

சென்னை: சென்னை காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், கடந்த 7 நாட்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தொடர்பான சிறப்பு சோதனையில், 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 43 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். 78.7 கிலோ கஞ்சா, 69 கிராம் மெத்தம்பெடமைன், 16 செல்போன்கள், ரொக்கம் ரூ.12,700-, 6 இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னையில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில். காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

     

இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 10.03.2023 முதல் 16.03.2023 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கஞ்சா உள்பட போதை பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 43 குற்றவாளிகள் கைது. 78.7 கிலோ கஞ்சா, 69 கிராம் மெத்தம்பெடமைன், ரொக்கம் ரூ.12,700, 6 இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 கார் பறிமுதல் செய்யப்பட்டது.

 

இதில் குறிப்பிடும்படியாக, N-4 மீன்பிடி துறைமுகம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் கடந்த 15.03.2023 அன்று காலை, மீன்பிடி துறைமுகம், டோல்கேட் சந்திப்பு அருகே கண்காணிப்பு பணியில் இருந்த போது, அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி, காரில் வந்த 3 நபர்களிடம் விசாரணை செய்தபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். மேலும் மேற்படி காரை சோதனை செய்ததில், ஆந்திராவில் இருந்து விற்பனைக்காக கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

 

அதன்பேரில் சட்டவிரோதமாக காரில் கஞ்சா கடத்தி வந்த 1.ஈஸ்வர பிரசாத், வ/38, த/பெ.நானையா, பைபாஸ் ரோடு, பளிகாட்டம் கிராமம், நரசிபட்னம் தாலுகா, விசாகப்பட்டினம், ஆந்திரா மாநிலம், 2.வெங்கடபதி ராஜு, வ/30, த/பெ.சாசம்ராஜு, மர்லபட்டு கிராமம், கல்லூர் தாலுகா, தெலுங்கானா மாநிலம், 3.சிவகுமார், வ/42, த/பெ.பிக்சாபதி, அன்மகண்டா, வாராங்கல், தெலுங்கானா மாநிலம் ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 20.45 கிலோ, 3 செல்போன்கள் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 கார் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், புனித தோமையர் மலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (PEW/St.Thomas Mount) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் 13.03.2023 அன்று மீனம்பாக்கம், சாந்தி பெட்ரோல் பங்க் அருகில் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த லல்லு முண்டல், வ/40, த/பெ.முனி முண்டல், முசிதாபாத், மேற்கு வங்காளம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 18 கிலோ கஞ்சா மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல, திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (PEW/Triplicane) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (16.03.2023), பெரியமேடு, மூர்மார்க்கெட் அருகே சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த பிசித்ரகுமார், வ/23, த/பெ.பரத்சரம் சாஹு, கஜேந்திரபூர், ஜெய்பூர், ஒடிசா மாநிலம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 11.5 கிலோ மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

H-6 ஆர்.கே நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் 14.03.2023 அன்று ஆர்.கே நகர், கெனால் ரோடு எழில் நகர் பாலம் சந்திப்பு பகுதியில் சட்டவிரோதமாக விற்பனைக்காக மெத்தம்பெட்டமைன் போதை பொருளை கடத்தி வந்த, 1.டார்வின் வின்சன், வ/40, த/பெ.அந்தோணிசாமி, அன்னை சிவகாமி நகர் 3வது தெரு, எண்ணூர், சென்னை, 2.வாசிம் ராஜா, வ/31, த/பெ.முகமதுரபீக், நேதாஜி நகர் 3வது தெரு, தண்டையார்பேட்டை, சென்னை, 3.சௌபர் சாதிக், வ/32, த/பெ.முகமதுசுல்தான், தமிழர் நகர் மெயின் ரோடு, தண்டையார்பேட்டை, சென்னை, 4.வேணுகோபால், வ/46, த/பெ.ராஜ், இந்திரா காந்தி நகர் 1வது தெரு, தண்டையார்பேட்டை, சென்னை ஆகிய 4 நபர்களை  கைது செய்தனர். அவர்களிடமிருந்து 60 கிராம் மெத்தம்பெட்டமைன், 5 செல்போன்கள், ரொக்கம் ரூ.12,000, 1 எடை மெஷின் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள்  ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் சென்னை காவல் ஆணையாளரி ன் உத்தரவின்  பேரில் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், காவல் துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆளிநர்கள் அடங்கிய காவல் குழுவினர், தீவிர விசாரணை மற்றும் தனிக்கவனம் செலுத்தி கடந்த 2021ம் ஆண்டு முதல் நடப்பாண்டு இதுவரையில், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 654 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 1,483 குற்றவாளிகளின் சொத்து மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் சேகரித்து, சட்டரீதியாக முடக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டு இதுவரையில் மொத்தம் 783 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

இதில் 10.03.2023 முதல் 16.03.2023 வரையிலான 7 நாட்களில் கஞ்சா குற்றவாளிகளின் 2 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: