பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் மார்ச் 19-ம் தேதி அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடைபெறுகிறது..!

சென்னை: பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் வரும் 19-ம் தேதி அடைப்படை எழுத்தறிவு தேர்வு நடைபெறுகிறது. 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப் படிக்கத் தெரியாத வயது வந்தோருக்கு எழுத்தறிவுக் கல்வி வழங்கப்படுகிறது. புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் 28,848 மையங்களில் 5.28 லட்சம் பேருக்கு எழுத்தறிவுப் பயிற்சி தரப்படுகிறது.

பயிற்சி பெறுபவர்களுக்கு அடைப்படை எழுத்தறிவுத் தேர்வு நடத்தப்படும் அரசால் எழுத்தறிவுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. அடிப்படை எழுத்தறிவுத் தேர்வை எழுத விரும்புவோர், கற்போர் மையம் வட்டார வளமையம், முதன்மை கல்வி அலுவலகத்தை அணுகி மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-23 செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் அதில் பயின்று வருவோருக்கு அடிப்படை எழுத்தறிவு தேர்வு மார்ச் 19-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் மற்றும் ஆய்வு கூட்டம் நடத்துதல் குறித்து அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத மற்றும் படிக்கத் தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவை வழங்க 2022-23ஆண்டில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் பயின்று வருபவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு தேர்வு வருகிற மார்ச் 19 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

 இந்த அடிப்படை எழுத்தறிவு தேர்வை சிறப்பாக நடத்துவது குறித்து அனைத்து மாவட்ட தேர்வர்களுக்கு முன்னேற்பாடுகளை முதன்மைக் கல்வி அலுவலகர்கள் தலைமையில் கடந்த 15-ம் தேதி தொடங்கி மார்ச் 17-ம் தேதிக்குள் ஏதேனும் ஒரு நாள் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் தேர்வு தொடர்பான வழிகாட்டு நெறிமுறையும் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நடைபெற இருக்கும் தேர்வு முன்னேற்பாட்டு கூட்டத்திற்கு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர், மாவட்ட கல்வி அலுவலர்கள், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர் மற்றும் உதவி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் ஆகியோர் உரிய விவரங்களுடன் கலந்து கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுவதாக பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக இயக்குநர் அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories: