×

தமிழ்நாடு தலைமைச் செயலக பணியாளர்களுக்கான மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு தலைமைச் செயலக பணியாளர்களுக்கான மருத்துவ முகாமை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17.3.2023) தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில், தலைமைச் செயலக பணியாளர்களுக்காக தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம், அப்போலோ மருத்துவமனையோடு இணைந்து நடத்தும் மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து, முகாமில் மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகளை பார்வையிட்டார்.

தமிழ்நாடு தலைமைச் செயலக பணியாளர்களுக்கு அப்போலோ மருத்துவமனையின் சார்பில் முழு உடல் பரிசோதனை முகாம் 17.3.2023 முதல் 27.3.2023 வரை நடைபெறவுள்ளது. இப்பரிசோதனை முகாமில் சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு, கொலஸ்ட்ரால், இருதய பரிசோதனை, சிறுநீரகப் பரிசோதனை, இரத்தப் பரிசோதனை, இ.சி.ஜி., எக்ஸ்ரே, அல்ட்ரா சோனோகிராம், எக்கோ போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இம்மருத்துவ முகாம் மூலம் சுமார் 5000 பணியாளர்கள் பயன்பெறுவார்கள்.

இந்த நிகழ்வின்போது, உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்  துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ப. செந்தில்குமார், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் மரு. ச. உமா, அப்போலோ மருத்துவமனை குழும துணைத் தலைவர் முனைவர் பிரீத்தா ரெட்டி, மற்றும் தமிழ்நாடு தலைமைச் செயலக சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Tamil Nadu ,Chief Secretariat , Chief Minister M. K. Stalin inaugurated the medical camp for Tamil Nadu Chief Secretariat staff
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்