அதிமுகவில் பிரிந்திருப்பவர்கள் ஒன்று சேர்ந்தால் தான் பலத்தை நிரூபிக்க முடியும்: தேமுதிக பொருளாளர் பிரேமலதா கருத்து

புதுக்கோட்டை: அதிமுகவில் பிரிந்திருப்பவர்கள் ஒன்று சேர்ந்தால் தான் பலத்தை நிரூபிக்க முடியும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தவர் பால் உற்பத்தியாளர்களின் போராட்டத்திற்கு தேமுதிக ஆதரவளிப்பதாக தெரிவித்தார். தேமுதிக கூறிய பல திட்டங்களை தற்போது ஆட்சியாளர்கள் நிறைவேற்றி வருவதாக குறிப்பிட்ட பிரேமலதா விஜயகாந்த் கடந்த 2009-ம் ஆண்டே பெண்கள் நம் நாட்டின் கண்கள் திட்டம் மூலம் நுற்றுக்கணக்கானோருக்கு தலா ரூ.10,000 வைப்பு தொகையை விஜயகாந்த் வழங்கியதாகவும் அதை முன் உதாரணமாக எடுத்து கொண்டு புதுச்சேரி பட்ஜெட்டில் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அதிமுகவிற்குள் பல விரிசல்கள் ஏற்பட்டு நான்காக பிரிந்துள்ள அனைவரும் ஒன்று சேர்ந்தால் தான் பலத்தை நிரூபிக்க முடியும் என்றும் அதிமுக, பாஜக கூட்டணிக்குள்ளே ஒருவரை ஒருவர் விமர்சிப்பது ஆரோக்கியமானது அல்ல என்றும் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்தார். மக்கள் சார்ந்த பிரச்சனைகளில் தேமுதிக பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளதாகவும் நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

Related Stories: