×

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள பல்வேறு மாவட்டங்களில் லேசான மழை பெய்தது. இன்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் மேலும் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சாலைகளில் வெள்ளம் தேங்கும் அளவிற்கு மழை பெய்துள்ளதாலும், இதுநாள் வரை சுட்டெரித்து வந்த வெப்பம் சற்று தணிந்துள்ளதாலும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிந்துள்ளது. இந்நிலையில் இன்று சென்னை வேளச்சேரியில் காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது.Tags : Tamil Nadu ,Meteorological Inspection Centre , Chance of moderate rain with thundershowers for 5 days in Tamil Nadu: Meteorological Department information
× RELATED மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக...