×

கலைஞர் பெயரில் விருது, காவல் குழந்தைகள் காப்பகம் : பெண் காவலர்கள் நலனுக்காக 9 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை : சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவலர்கள் பொன்விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த பொன்விழாவில் அவள் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.பின்னர் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.பொன்விழா என்று சொல்லப்பட்டாலும் இது பெண்களுக்கான விழா.பெண்கள் அதிக அளவு அரசியலுக்கு வர வேண்டும்.

அவர்கள் மேடைகளில் முழங்க வேண்டும் என்று கூறியவர் அண்ணா.பெண்களுக்கு சொத்துரிமை உண்டு என்பதை சட்டமாக்கியவர் கலைஞர்.பெண்களின் கைகளில் இருக்கும் கரண்டியை பிடுங்கி புத்தகங்களை கொடுக்க வேண்டும் என்று சொன்னவர் தந்தை பெரியார். தமிழ்நாட்டில் 3,50,000 பெண் காவலர்கள் பணியாற்றி வருகிறார்கள் என்றால் அதற்கான விதையை விதைத்தவர் கலைஞர்.படிக்க மட்டுமல்ல அதிகாரம் மிக்க பதவிகளுக்கு பெண்கள் வர வேண்டும் என்றவர் பெரியார். பெண்கள் காக்கிச் சீருடையில் துப்பாக்கியை ஏந்த வைத்தவர் கலைஞர்.50ம் ஆண்டு பொன்விழாவில் தமிழ்நாட்டின் பெண் காவலர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்,என்றார்.

தொடர்ந்து பெண் காவலர்கள் நலனுக்காக 9 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

1. பெண் காவலர்களுக்கு கலைஞர் பெயரில் விருது வழங்கப்படும்.

2. காவல் குழந்தைகள் காப்பகம் மேம்படுத்தப்படும்.

3.காவல்துறைக்கு பெண்கள் என்னும் தேசிய மாநாடு தமிழ்நாட்டில் நடத்தப்படும்.

4.ரோல்கால் எனப்படும் காவல் அணிவகுப்பு இனி காலை 7 மணி பதிலாக 8 மணி வரை என மாற்றப்படும்.

5.சென்னை, மதுரையில் பெண் காவலர்கள் தங்கும் விடுதி விரைவில் அமைக்கப்படும்.

6. பெண் காவலர்களுக்கு துப்பாக்கிச் சுடும் போட்டி தனியாக நடத்தப்பட்டு விருது, பரிசுகள் வழங்கப்படும்.

7, அனைத்து காவல் நிலையங்களிலும் பெண் காவலர்களுக்கு தனி ஓய்வறை அமைக்கப்படும்.

8.டிஜிபி அலுவலகத்தில் பணி வழிகாட்டும் ஆலோசனைக் குழு உருவாக்கப்படும்.

9.பெண் காவலர்களின் குடும்பச் சூழலுக்கு ஏற்ப விடுப்பு, பணியிட மாறுதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 


Tags : Chief Minister ,M.K.Stalin , Artist, Award, Police Children's Shelter
× RELATED தமிழ்நாட்டை மொழி, இனம், பண்பாட்டு...