×

ஸ்ரீநகரில் இசட் பிளஸ் பாதுகாப்புடன் வந்தவர்: பிரதமர் அலுவலக உயர் அதிகாரி எனக்கூறி மோசடி செய்ததால் கைது

காஷ்மீர்: பிரதமர் அலுவலக உயர் அதிகாரி என்று கூறி ஸ்ரீ நகரில் இசட் பிளஸ் பாதுகாப்புடன் வலம் வந்த குஜராத்தை சேர்ந்த மோசடி நபரை போலீசார் கைது செய்தனர். பிரதமரின் அலுவலகத்தில் கூடுதல் இயக்குனராக பணியாற்றி வருவதாக கூறி ஜம்மு காஷ்மீருக்கு இந்த ஆண்டு இருமுறை சென்றுள்ளார். அங்குள்ள 5 நட்சத்திர விடுதியில் தங்க வைத்து குண்டு துளைக்காத காருடன் இசட் பிளஸ் பாதுகாப்பும் காஷ்மீர் மாநில நிர்வாகத்தால் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் முதல் முறையாக சென்ற அவர் அம்மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. துணை ராணுவ படையினர் புடைசூழ பல இடங்களை சுற்றிப்பார்த்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான தகவல்களை அவர் டிவீட்டரில் பதிவிட்டுள்ளார். குஜராத் மாநில பாஜக பொது செயலாளர் திரு. பிரதீப் சிங் பகேலா உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டிவெட்டரில் இவர்களை பின் தொடர்பவர்களாக உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2-ம் தேதி மீண்டும் அவர் ஸ்ரீ நகருக்கு வந்தார். அவர் மீது சந்தேகமடைந்த மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் பெயர் கிரண் பாய் பட்டேல் என்பதும் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. அவர் கைது செய்யப்பட்ட விவகாரத்தை மத்திய, மாநில அரசுகள் ரகசியமாக வைத்திருந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோது விவரங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Srinagar ,High Officer , In Srinagar, Z Plus security, claiming to be a top official of the Prime Minister's office, fraud, arrested
× RELATED புல்வாமாவில் என்கவுன்டர் தீவிரவாதி சுட்டு கொலை