சென்னை: ஏர்.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சியை ஒட்டி சென்னையில் மார்ச் 19-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியை காண வருவோருக்காக மெட்ரோ ரயில்சேவை 11 மணிக்கு பதிலாக நள்ளிரவு 12 வரை நீடிக்கப்பட்டுள்ளது. நேரு உள்விளையாட்டு அரங்கில் இரவு 7மணி முதல் 11.30 மணி வரை நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
