×

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த 12ம் தேதி கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்தது இலங்கையின் பருத்தித்துறை நீதிமன்றம்

கொழும்பு: கொழும்பு: நாகை மீனவர்கள் 12 பேரை நிபந்தனைகளுடன் இலங்கையின் பருத்தித்துறை நீதிமன்றம் விடுதலை செய்தது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே, நெடுந்தீவு அருகே நாகை மற்றும் புதுக்கோட்டை மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அவ்வழியாக ரோந்து பணிக்காக வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 2 படகுகளில் இருந்த 16 பேரை கைது செய்தது. மேலும் மீனவர்களிடம் இருந்து 2 விசைப்படகுகளை பறிமுதல் செய்தது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை வெவ்வேறு நீதிமன்றங்களில் ஆஜர்படுத்திய நிலையில், நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த 12 மீனவர்களை பருத்தித்துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணாந்தன் பொன்னுத்துரை 12 மீனவர்களையும் வரும் 17ம் தேதி வரை சிறைக்காவலில் வைக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் மீனவர்களின் படகுகள் அங்குள்ள துறைமுகத்தில் நிறுத்தி வைக்குமாறும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த 12ம் தேதி கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேரை இலங்கையின் பருத்தித்துறை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்தும், மீனவர்களின் விசைப்படகை அரசுடமையாக்கியும் உத்தரவிட்டுள்ளது.

Tags : Sri Lanka ,Cotton Court , Sri Lanka's Cotton Department Court freed 12 naga fishermen who were arrested on the 12th for cross-border fishing.
× RELATED போலி பாஸ்போர்ட் மூலம் சென்னையில்...