×

தூத்துக்குடி அருகே தனியார் ஆலையில் நன்கொடை கேட்டு மிரட்டிய பாஜக நிர்வாகி கைது: போலீசார் நடவடிக்கை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே தனியார் ஆலையில் நன்கொடை கேட்டு மிரட்டிய பாஜக மாநில இளைஞரணி செயலாளர் பூபதி கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வேலவன் பகுதியில் கிருஷ்ணா புளு மெட்டல்ஸ் என்ற தனியார் கிரஷர் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு நேற்று மாலை பாஜக மாநில இளைஞரணி செயலாளர் பூபதி உள்ளிட்டோர் சென்று நன்கொடை கேட்டுள்ளனர். அப்போது  பணியில் இருந்த மேலாளர், கிரஷர் ஆலை நிறுவனர் தற்போது இல்லாததால் பிறகு வருமாறு பூபதியிடம் கூறியுள்ளார். இதனை ஏற்க மறுத்த பாஜகவினர் கொலை மிரட்டல் விடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் கிரஷர் ஆலை முன்பாக தங்களது சொகுசு கார்கள் மூலமாக லாரிகளை வழிமறித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய சாத்தான்குளம் போலீசார், பாஜக மாநில இளைஞரணி செயலாளர் பூபதி கைது செய்து சொகுசு கார்களையும் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து போலீசாரின் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags : Bajaka ,Thuthukudi , Thoothukudi, private factory, Nangodai, BJP executive arrested
× RELATED அதிகரிக்கும் அதிருப்தி… உட்கட்சி...