திருச்சி: தமிழகத்தில் முதல் முறையாக 63 வயது நோயாளிக்கு இருதய குழாயில் ஏற்பட்ட அடைப்புகளை நீக்கி திருச்சி அண்ணல் காந்தி நினைவு பொது மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். வழக்கமாக இருதய குழாயில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்வதற்கு ஆஞ்சியோ செய்யப்படுவது வழக்கம் ஆனால் திருச்சி அரசு மருத்துவமனையில் 63 வயதான அமர்நாத் என்பவருக்கு சுழற்சி ஆஞ்சியோ செய்யப்பட்டு ஸ்டண்ட் வைக்கப் பட்டுள்ளது.
ரத்த குழாயில் இருந்த அதிகமான கால்சிய படிமங்கள் அகற்றப் பட்டுள்ளன. இந்த சிகிச்சை தமிழ் நாட்டில் முதல் முறையாக திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை முதல்வர் நேரு தெரிவித்துள்ளார். திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் 30 சதவீத நபர்களுக்கு ரத்த குழாயில் கால்சியம் படிமங்கள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
