மகாராஷ்டிரா துணைமுதல்வரின் மனைவிக்கு லஞ்சம் தர முயற்சி

மும்பை: ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் தனது தந்தையை ஒரு வழக்கிலிருந்து காப்பாற்ற தனக்கு லஞ்சம் தர முயன்றதாக மகாராஷ்டிரா துணைமுதல்வர் தேவேந்திர பட்நவிசின் மனைவி அம்ருதா பட்நவிஸ் மலபார் ஹில் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து மலபார் ஹில் போலீசார் கூறுகையில் , “அனிஷா என்ற ஆடை வடிவமைப்பாளர் கடந்த பல மாதங்களாக அம்ருதா பட்நவிசுடன் பழக்கம் வைத்திருந்துள்ளார்.

அதை பயன்படுத்தி ஒரு குற்ற வழக்கிலிருந்து தனது தந்தையை விடுவிக்க அம்ருதாவுக்கு ரூ.1 கோடி லஞ்சம் தர முயன்றுள்ளார். இதற்கு அம்ருதா மறுக்கவே, அனிஷாவும், அவரது தந்தையும் அம்ருதாவை மிரட்டியுள்ளனர். இதுதொடர்பான அம்ருதாவின் புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது. யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories: