நடிகர் ராகுல் மாதவ் திருமணம்

பெங்களூரு: தமிழில் ‘அதே நேரம் அதே இடம்’ படம் மூலம் நடிகராக அறிமுகமனாவர் ராகுல் மாதவ். ‘தனி ஒருவன்’ உட்பட சில படங்களில் நடித்துள்ள அவர், மலையாளத்தில் ஏராளமானப் படங்களில் நடித்துள்ளார். கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

இவருக்கும் பெங்களூரைச் சேர்ந்த தீபா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்கள் திருமணம் பெங்களூரில் எளிமையாக நேற்று முன்தினம் நடந்தது. இதில், இயக்குநர் ஷாஜி கைலாஷ், நடிகர் நரேன் உட்பட திரையுலகினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்தியுள்ளனர்.

Related Stories: