சென்னை விமான நிலைய புதிய ஒருங்கிணைந்த முனையம் எப்போது பயன்பாட்டிற்கு வரும்?..மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி!

புதுடெல்லி: சென்னை விமான நிலையத்தில், உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்களை இணைத்து அமைக்கப்பட்டுவரும் புதிய ஒருங்கிணைந்த முனையம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்று மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பினார். மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மக்களவையில் எழுப்பிய கேள்விகள் வருமாறு :

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு விமான நிலையங்களை மேம்படுத்தவும் அதனை முறையாகப் பராமரிக்கவும் அமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? சென்னை விமான நிலையத்தில், உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்களை இணைத்து  அமைக்கப்பட்டுவரும் புதிய ஒருங்கிணைந்த முனையத்தின் கட்டிடத்தில் அமல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் என்ன?  

அத்திட்டத்தின்கீழ் ஒவ்வொரு கட்டத்திலும் நடைபெற்ற பணிகளின் விவரங்கள், அத்திட்டத்தின் தற்போதைய நிலை, அதற்காக ஒதுக்கப்பட்டு செலவிடப்பட்ட நிதி எவ்வளவு, இத்திட்டப் பணிகள் எப்போது நிறைவு பெறும். பணிகள்  முழுமையாக நிறைவுபெற்று அந்த முனையம் எப்போது மக்கள் பயன்பாட்டிற்கு வரும். சரக்குகளை கையாளும் வசதிகளுடன் கூடிய புதிய சேட்டிலைட் முனையத்தை அமைக்க ஏதேனும் புதிய திட்டங்கள் அல்லது முன்மொழிவு உள்ளதா என்றும் அவ்வாறெனில் அதன் விவரங்களை தெரியப்படுத்தவும். தமிழ்நாட்டில் தற்போது இயங்கி வரும் விமானங்களின் எண்ணிக்கையுடன் விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை விவரங்களையும் தெரியப்படுத்தவும் என கேள்வி எழுப்பினார்.

Related Stories: