சூனாம்பேடு ஊராட்சி நிர்வாகத்தை பற்றி அவதூறு போஸ்டர் ஒட்டியவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார்

செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியம், சூனாம்பேடு முதல்நிலை ஊராட்சியின் தலைவராக கண்ணன் உள்ளார். இந்நிலையில், இவ்வூராட்சி நிர்வாகத்தை பற்றி மர்ம நபர்கள்  நேற்று முன்தினம் இரவு அவதூறு ஏற்படுத்தும் வகையில் போஸ்டர்கள் தயாரித்து, அதனை பொதுமக்கள் கூடும் முக்கிய பகுதிகளில் ஒட்டியதோடு, வரும் 23ம் தேதி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும் என போஸ்டரில் அச்சடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் சித்தாமூர் ஒன்றிய ஊராட்சிகளின் கூட்டமைப்பு தலைவர் நிர்மல்குமார் ஆகியோர் முன்னிலையில், நேற்று சூனாம்பேடு காவல் நிலையத்தில் அவதூறு போஸ்டர்கள் ஒட்டிய மர்ம நபர்களை கைது செய்யக்கோரி புகார் மனு அளித்தனர். இந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

Related Stories: