×

பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் வீட்டு கடனுக்கான வட்டி 8.4 சதவீதமாக குறைப்பு

சென்னை: நாட்டின் முதன்மையான பொதுத்துறை வங்கியான பாங்க் ஆப் மகாராஷ்டிரா (பிஓஎம்) வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை தற்போதுள்ள 8.6 சதவீதத்தில் இருந்து 8.4 சதவீதமாக குறைப்பதாக அறிவித்தது. புதிய விகிதம் மார்ச் 13, 2023 முதல் நடைமுறைக்கு வரும் என்று பாங்க் ஆப் மகாராஷ்டிரா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
8.4 சதவீத வீட்டுக்கடன் வங்கித்துறையில் மிகக் குறைவானதாக உள்ளது.

தவிர, துணை ராணுவ படைகள் உட்பட பாதுகாப்பு பணியாளர்களுக்கான சிறப்பு வட்டி விகிதத்தையும் (ஆர்ஓஐ) வங்கி கொண்டுள்ளது. பாங்க் ஆப் மகாராஷ்டிரா ஏற்கனவே பண்டிகை சலுகையின் கீழ் அதன் தங்கம், வீடு மற்றும் கார் கடன்களுக்கான செயலாக்க கட்டணங்களை தள்ளுபடி செய்துள்ளது. இந்த சலுகையை அறிமுகப்படுத்துவதன் மூலம், பாங்க் ஆப் மகாராஷ்டிரா அதன் தயாரிப்புகளின் வரிசையின் மீது கூடுதல் நன்மைகளுடன், மிகவும் லாபகரமான ரேட் ஆப் இன்ட்ரஸ்ட்-ஐ வழங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கிறது.Tags : Bank of Maharashtra , Bank of Maharashtra cuts home loan interest rate to 8.4 percent
× RELATED கடந்த நிதியாண்டில் ரூ.1,152 கோடி லாபம் ஈட்டிய பாங்க் ஆப் மகாராஷ்டிரா