சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன். இதை தொடர்ந்து, காங்கிரஸ் மேலிட தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லி சென்றிருந்தார். நேற்று முன்தினம் மாலை விமானம் மூலம் சென்னை திரும்பினார். பயணத்தின் காரணமாக மிகவும் அசவுகரியமாக இருந்த ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு நேற்று முன்தினம் இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அதற்குள் இளங்கோவனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல் பரவியது. இதனிடையே, மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் நுரையீரலில் லேசான தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.