நாடாளுமன்ற வளாகத்தில் அரசு பள்ளி மாணவர்களை சந்தித்தது மகிழ்ச்சி: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் டிவிட்

சென்னை: டெல்லிக்கு கல்விச் சுற்றுலா வந்துள்ள அரசுப் பள்ளி மாணவர்களை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தது மகிழ்ச்சி என்று ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் டிவிட்டரில் கூறியுள்ளார். இதுகுறித்த அவரது டிவிட்டர் பதிவு: ராமநாதபுரம், விருதுநகரில் இருந்து டெல்லிக்கு கல்விச் சுற்றுலா வந்துள்ள அரசுப் பள்ளி மாணவர்களை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தது மகிழ்ச்சி, நிதிக்கல்வி குறித்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சுற்றுலா அவர்களின் எதிர்காலத்திற்கு துணைபுரியும், வாழ்த்துகள். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: