கொச்சி விமான நிலையத்தில் உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்தல்: வாலிபர் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் உள்ளாடைக்குள் மறைத்து ரூ.34 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். துபாயில் இருந்து கொச்சிக்கு ஒரு தனியார் விமானம் நேற்று இரவு வந்தது. இந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது ஒரு பயணியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரை தனி அறைக்கு கொண்டு சென்று பரிசோதித்தனர்.  இதில் அவர் உள்ளாடைக்குள் 640 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.34 லட்சமாகும். விசாரணையில் அவர் மலப்புரம் மாவட்டம் சங்கரங்குளம் பகுதியை சேர்ந்த அக்பர் என்பது தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு அவர் கரிப்பூர் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Related Stories: