×

ஹூப்பள்ளி-தஞ்சாவூருக்கு 20ம் தேதி முதல் சிறப்பு ரயில் சேவை

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளி ரயில் நிலையத்தில் இருந்து தமிழ்நாட்டின் தஞ்சாவூருக்கு வாரந்திர சிறப்பு ரயில் சேவை வரும் 20ம் தேதி தொடங்குகிறது. இது குறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோடைகால விடுமுறை சமயத்தில் மக்கள் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு பயணம் செய்ய வசதியாக கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளி ரயில் நிலையத்தில் இருந்து தமிழ்நாட்டின் தஞ்சாவூருக்கு சிறப்பு ரயில் சேவை வரும் 20ம் தேதி முதல் ஏப்ரல் 24ம் தேதி வரை இயக்கப்படுகிறது.
அதன்படி எஸ்எஸ்எஸ் ஹூப்பள்ளி ரயில் நிலையத்தில் இருந்து (வண்டிஎண் 07325) மார்ச் 20, ஏப்ரல் 3, 10, 17 மற்றும் 24 ஆகிய தேதிகளி்ல் காலை 8.25 மணிக்கு புறப்பட்டு ஹாவேரி, ராணிபென்னூர், ஹரிஹர், தாவணகெரே, பீரூர், அரசிகெரே, துமகூரு, சிக்கபாணவார், சர்.எம்.விஷ்வேஸ்வரய்யா பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், கரூர், திருச்சி கோட்டை, திருச்சி சந்திப்பு, பூதலூர் வழியாக 2.15 மணிக்கு தஞ்சாவூர் சந்திப்பு சென்றடையும்.

மறு வழிதடத்தில் (வண்டி எண் 07326) தஞ்சாவூர் சந்திப்பில் மார்ச் 21, ஏப்ரல் 4, 11, 18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மாலை 7.40 மணிக்கு புறப்பட்டு பூதலூர், திருச்சி சந்திப்பு, திருச்சி கோட்டை, கரூர், சேலம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், எஸ்எம்விடி பெங்களூரு, சிக்கபாணவார், துமகூரு, அரசிகெரே, பீரூர், தாவணகெரே, ஹரிஹர், ராஜிபென்னூர், ஹாவேரி வழியாக ஹூப்பள்ளி சந்திப்புக்கு பகல் 12.30 மணிக்கு வந்தடையும். சிறப்பு ரயிலில் 20 போகிகள் உள்ளது. 1 ஏசி டு டயர், 3-ஏசி திரி டயர், 9 சிலிபர் கோச்சுகள், 5 ஜெனரல் கோச்சுகள், 2 செகண்ட் கிளாஸ் லெக்கேஜ் பிரேக்வேன், மாற்று திறனாளிகள் பயணிக்கும் போகிகள் உள்ளது. பயணிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்’ என்று கேட்டு கொள்வதாக செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதுடன் இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாக கூறியுள்ளது.

Tags : Hupally-Thanjavur , Hupally-Thanjavur special train service from 20th
× RELATED கெஜ்ரிவால் கைது குறித்து விமர்சித்த...