பிள்ளையை கிள்ளிவிட்டு, தொட்டிலை ஆட்டக்கூடாது: பாஜவுக்கு ஜெயக்குமார் கண்டனம்

சென்னை: பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டக்கூடாது என பாஜவுக்கு ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுக தயாராகி கொண்டிருக்கிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவு, நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது. நீட்டை ஒழிக்கிறோம், அதற்கான ரகசியம் எங்களுக்கு மட்டும் தான் தெரியும் என்றனர். 22 மாதங்களுக்கு பிறகும் ரகசியம் சொல்லாமல் உள்ளனர். எடப்பாடி பழனிசாமி உருவப்பொம்மையை எரித்ததால் பாஜ நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் நீக்கப்பட்டவரை மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார். பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டக்கூடாது. பாஜவின் செயல் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது.

Related Stories: