நாடாளுமன்ற புதிய கட்டிடத்துக்கு அம்பேத்கர் பெயர் சூட்ட வேண்டும்: அகில இந்திய எஸ்சி, எஸ்டி மாநாட்டில் தீர்மானம்

பெங்களூரு:   பெங்களூருவில் நடந்த அகில இந்திய எஸ்சி எஸ்டி கூட்டமைப்பு மாநாட்டில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்ட வேண்டும், தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு அளிக்கவேண்டும்  என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அகில இந்திய எஸ்.சி.,எஸ்டி கூட்டமைப்பின் சார்பில் பெங்களூருவில் நேற்று மாநாடு நடந்தது. அவ்வமைப்பின் கர்நாடக மாநில தலைவர் டாக்டர் ஆர். ராஜசேகரன் தலைமையில் நடந்த மாநாட்டில் அகில இந்திய தலைவர் டாக்டர் உதி் ராஜ் இதை தொடங்கி வைத்து பேசியதாவது:  நாடாளுமன்ற புதிய கட்டிடத்திற்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பெயரை வைக்கவேண்டும் என்பது எங்களின் கோரிக்கை ஆகும். கொரோனா தொற்று அதிகம் பரவிய போது இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டபோது இதை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பெயரை தவிர வேறு எந்த பெயரையும் வைக்கக்கூடாது’ என்றார். மாநாட்டில், அகில இந்திய எஸ்சி எஸ்டி கூட்டமைப்பின் மாநில செயல் பொது செயலாளர் சங்கர தாஸ் அறிமுக உரையாற்றினார். இந்த மாநாட்டில் தெலங்கானா எஸ்சிஎஸ்டி தலைவரும் அகில இந்திய அளவிலான துணை ஒருங்கிணைப்பாளருமான மகேஸ்வர் ராஜ், தமிழ்நாடு தலைவரும்  செய்தி தொடர்பாளருமான அக்ரி டாக்டர் கருப்பையா,  போலீஸ் டிசிபி எஸ். சித்தராஜூ, எஸ்சி எஸ்டி அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் சிவசங்கர், ஒன்றிய பொதுப்பணித்துறை (ஓய்வு)  அன்பழகன், பேங்க் ஆப் பரோடா எஸ்சி எஸ்டி ஊழியர்களின் தேசிய தலைவரும் அகில இந்திய எஸ்சி எஸ்டி கூட்டமைப்பின் தமிழ்நாடு பொது செயளாருமான தமிழ் செல்வன், மாநில செயல் தலைவர் சண்முகம்,  மாநில அமைப்பாளர் சிவசங்கர், துணை தலைவர் வேலு, பொருளாளர் சிவன்னா,  அம்பேத்கர் மக்கள் இயக்கம் செயல் தலைவர் இளமுருகு முத்து,ஜெயசீலன், டேவிட், இந்திய குடியரசு கட்சியின் மாநில துணை தலைவர் முக்ரம் அலி கான் , டி.ஆர்.டி.ஓ. சுரேந்திரன், பெல் சிவகுமார் உள்பட ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு,கேரளா  உள்ளிட்ட  மாநிலங்களை சேர்ந்த  எஸ்.சி, எஸ்.டி. அமைப்பினர் கலந்து கொண்டனர்.

Related Stories: