×

காஸ் கசிவால் சிலிண்டர்வெடித்து 3 பேர் பலத்த காயம்

பெங்களூரு: பெங்களூருவில் கேல் நிறுவனத்தின் சார்பில் காஸ் இணைப்பு கொடுக்கும் பணி நடக்கிறது. நேற்று காலை எச்.எஸ்.ஆர்.லே அவுட் பகுதி மதீனா மசூதி அருகில் பெங்களூரு மாநகராட்சி சார்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டியபோது, கேல் நிறுவனம் அமைத்திருந்த காஸ் பைப் லைன் பழுதாகி காஸ் கசிந்து மசூதி அருகில் வசிக்கும் ஜமீர் அகமது என்பவர் வீட்டில் காஸ் கசிந்து சிலிண்டர் வெடித்தது. இதில் லைகா அஞ்சும் (45), முபாசிரா (40) உள்பட 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை உடனடியாக விக்டோரியா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சிலிண்டர் வெடித்தில் வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி விழுந்தது. தகவல் கிடைத்தும் கேல் கம்பெனி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். சிலி்ண்டர் வெடித்தது தொடர்பாக அப்பகுதி மக்களிடம் விசாரித்தபோது  பயங்கர சத்ததுடன் வெடித்ததால், அச்சமடைந்ததாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து எச்எஸ்ஆர் லே அவுட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.



Tags : Cylinder burst due to gas leak, 3 seriously injured
× RELATED ஜனநாயகன் திரைப்படம் தொடர்பான...