இந்திய தலைமை தேர்தல் ஆணையரின் அனுமதி பெற்றே அதிகாரிகள் மாற்றம்: தலைமை செயலாளருக்கு கர்நாடக தேர்தல் அதிகாரி கடிதம்

பெங்களூரு: மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையரின் அனுமதி பெறாமல், அதிகாரிகள் யாரையும் பணியிடமாற்றம் செய்யக்கூடாது என்று மாநில தலைமை செயலாளருக்கு கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ்குமார் மீனா கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து மாநில தலைமை செயலாளர் வந்திதாசர்மாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘மாநில சட்டப்பேரவைக்கு 16வது பொது தேர்தல் விரைவில் நடக்கவுள்ளது. தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த பணிகள் மேற்கொண்டு வருகிறோம். சமீபத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார் தலைமையில் அதிகாரிகள் பெங்களூரு வந்து ஆலோசனை நடத்தி சென்றுள்ளனர். இன்னும் சில நாட்களி்ல் தேர்தல் நடத்தை விதி்கள் அமலுக்கு வருகிறது.

கடந்த 8ம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில அரசின் தலைமை செயலாளர் உள்பட உயரதிகாரிகள் கலந்து கொண்டீர்கள். அதில் தேர்தல் சமயமாக இருப்பதால், அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் சில நாட்கள் பல துறைகளின் பணியாற்றும் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து வருவதாக ஆணையத்தின் கவனத்திற்கு வந்துள்ளது.

இனிமேல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வரை பணியிடமாற்றம் செய்ய வேண்டுமானால் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற வேண்டும். இதை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும். தங்கள் கீழ் இயங்கி வரும் அனைத்து துறைகளின் முதன்மை செயலாளரகள், வாரிய, கழகங்களின் அதிகாரிகள் ஆகியோருக்கு கடிதம் மூலம் தாங்கள் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இம்மாதம் இறுதியில் தேர்தல் தேதி அறிவிக்கும் வாய்ப்புள்ளது. இந்த சமயத்தில் தலைமை செயலாளருக்கு தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியுள்ளது’ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வரை பணியிடமாற்றம் செய்ய வேண்டுமானால் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற வேண்டும்.

Related Stories: