×

பாஸ்டேக் முறை அறிமுகமானபின் சுங்கச்சாவடி ஊழியர்களை பணிநீக்க உத்தரவிடவில்லை: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்.!

டெல்லி: பாஸ்டேக் முறை அறிமுகமானபின் சுங்கச்சாவடி ஊழியர்களை பணிநீக்க ஒன்றிய அரசு உத்தரவிடவில்லை என்று ஒன்றிய சாலை, போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சுங்கச்சாவடியை குத்தகைக்கு எடுத்துள்ள தனியார் நிறுவனங்கள் ஆட்குறைப்பை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.டெல்லி நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி, பதில் நேரம் நடைபெற்று வருகிறது. அப்போது, எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, பாஸ்டேக் முறை அறிமுகமானபின் சுங்கச்சாவடி ஊழியர்களை பணி நீக்க உத்தரவிடவில்லை.

சுங்கசுவடியை குத்தகைக்கு எடுத்துள்ள தனியார் நிறுவனங்கள் ஆட்குறைப்பை மேற்கொண்டுள்ளன எனவும் கூறினார். மேலும், தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் 4,934 ஒப்பந்தம் பணியாளர்கள் உள்ளனர். கடந்த நிதியாண்டில் நாட்டின் மொத்த சுங்கச்சாவடி மூலம் ஈடுபட்ட வருவாய் ரூ.34 ஆயிரம் கோடி என்றும் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் ரூ.4,183 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் இருந்து ரூ.3,642 கோடியும், தமிழ்நாட்டில் இருந்து ரூ.2,695 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது.

Tags : Union Minister ,Nitin Gadkari , After the introduction of the passtag system, the tollbooth employees were not ordered to be fired: Union Minister Nitin Gadkari.
× RELATED 24 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட்...