விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்தவருக்கு 20 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் உத்தரவு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் சின்னகுச்சிபாளையம் பகுதியில் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்தவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2020-ல் சின்னகுச்சிபாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவி கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் செந்தில் என்பவருக்கு போக்சோ நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.  

Related Stories: