×

நாடாளுமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்படுகிறது; இந்தியாவுக்கு எதிராக தான் எதுவும் பேசவில்லை: ராகுல் காந்தி பேட்டி

டெல்லி: இந்தியாவுக்கு எதிராக தான் எதுவும் பேசவில்லை என ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். அதானி குழும முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி எதிர்க்கட்சிகளும், ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி ஆளுங்கட்சியினரும் முழக்கம் எழுப்பி வருகின்றனர். இதனிடையே காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி இன்று நாடாளுமன்றத்திற்கு வந்தார். இதன் காரணமாக 4வது நாளாக இன்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகள் முடங்கியது. பின்னர் டெல்லியில் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்; இந்தியாவுக்கு எதிராக தான் எதுவும் பேசவில்லை என ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். லண்டனில் பேசியது குறித்து நான் முதலில் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க விரும்புகிறேன். நாடாளுமன்றத்தில் எனது கருத்தை சொல்ல உரிமை உள்ளது; ஆனால் பேச அனுமதி மறுக்கப்படுகிறது. பிரதான பிரச்சனையில் இருந்து திசை திருப்ப ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. அதானி பயன்பெற வேண்டும் என்பதற்காகவே விதிகள் திருத்தப்பட்டது. அதானி விவகாரம் பற்றி கூட்டுக் குழு விசாரணை தேவை என்ற கோரிக்கையை திசை திருப்பவே நாடகம் அரங்கேற்றம்.

ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி, அதானி, எஸ்பிஐ அதிகாரி, அந்நாட்டின் ஒரு மாநில முதல்வர் இருக்கும் புகைப்படம் பொதுவெளியில் உள்ளது. பொதுவெளியில் உள்ள ஒரு படத்தை நாடாளுமன்றத்தில் காண்பித்து பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்கிவிட்டார்கள். மோடி, அதானி குறித்து நான் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கச் சென்றேன்; 4 ஒன்றிய அமைச்சர்கள் என் மீது து குற்றச்சாட்டுகளை கூறினார்கள். ஆனால், அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் பதிலளிக்கவே விரும்புகிறேன்.

மக்களவை சபா நாயகரை சந்தித்து நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டேன். குற்றச்சாட்டுகளை கூறிய ஒன்றிய அமைச்சர்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை எனக்கும் அளிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் பேச நாளை எனக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என நம்புகிறேன். இவ்வாறு கூறினார்.


Tags : Parliament ,India ,Rahul Gandhi , Denied permission to speak in Parliament; He never said anything against India: Rahul Gandhi interview
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...