நுகர்வோர்கள் குடிநீர் கட்டணத்தை மார்ச் 31க்குள் செலுத்த வேண்டும்: சென்னை குடிநீர் வாரியம் வலியுறுத்தல்.!

சென்னை: கழிவு நீரகற்று வாரியத்திற்கு நுகர்வோர்கள் செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரியினையும், குடிநீர் கட்டணங்களையும் மார்ச் மாதம் 31ம் தேதிக்குள் செலுத்திட வேண்டுமென சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. வரி செலுத்துவதற்கு ஏதுவாக அனைத்து பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்கள் அனைத்து வேலை நாட்களிலும், சனிக்கிழமைகளிலும் மற்றும் மாத இறுதி ஞாயிற்றுக்கிழமையான 26ம் தேதியும் காலை 8.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இயங்கும்.  நுகர்வோர்கள் இவ்வசதியினைப் பயன்படுத்தி கட்டணங்களை செலுத்தி மேல்வரி, இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கைகளை தவிர்த்திட வேண்டும்.

நுகர்வோர்கள் https://bnc.chennaimetrowater.in/#/public/cus-login என்ற வலைத்தளத்தைப் பயன்படுத்தி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும்     நெட் பேங்கிங், யுபிஐ மூலமாகவும் மற்றும் வசூல் மையங்களில் உள்ள கியுஆர் குறியீடு போன்ற பிற கட்டண முறைகளையும் பயன்படுத்தி தங்களின் குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை செலுத்தலாம்.  மேலும், பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்களில், காசோலை மற்றும் பணமாக வரி செலுத்தலாம். எனவே, நுகர்வோர்கள் வரும் 31ம் தேதிக்குள் வரிகள் மற்றும் கட்டணங்களை செலுத்த வேண்டும் என சென்னைக் குடிநீர் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Stories: