சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் உடல் நலம் குறித்து விசாரித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

சென்னை: சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோனை நேரில் சந்தித்து, அவரது உடல் நலம் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விசாரித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான   ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு நேற்று திடீரென மூச்சுத் திணறல் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை சீராக இருப்பதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பிலும், மருத்துவமனை சார்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈவிகேஎஸ் இளங்கோவனை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து அவரது உடல்நலன் குறித்து விசாரித்தார்.

Related Stories: