×

நீடாமங்கலத்தில் இருந்து அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் சிவகங்கைக்கு அனுப்பி வைப்பு

நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில் இருந்து அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் சிவகங்கைக்கு அனுப்பி வைத்தனர். திருவாரூர் மாவட்டத்தில் இயங்கும் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு பல்வேறு சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சேமிக்கப்பட்ட நெல் மணிகள் மாவட்டத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்களுக்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. கூடுதலான நெல் மூட்டைகள் சரக்கு ரயில்களில் பல்வேறு மாவட்டங்களுக்கு அரவை அனுப்பப்படுகிறது.

இதேபோல, அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்களிலிருந்து அரவை செய்த அரிசிகளும் நீடாமங்கலத்திலிருந்து ரயில் பெட்டிகளில் பல்வேறு மாவட்டங்களுக்கு பொது விநியோக திட்டத்திற்கும் அனுப்பப்படுகிறது. இந்நிலையில் நேற்று நீடாமங்கலம்,வலங்கைமான் தாலுகா பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இந்தாண்டு சாகுபடி செய்து கொள்முதல் செய்த சன்ன ரகம் நெல் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு 158 லாரிகளில் 2,000 டன் நெல் மூட்டைகள் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து 42 ரயில் பெட்டிகள்(வேகன்)களில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஏற்றி அரவைக்கு சிவகங்கை அனுப்பி வைத்தனர்.

Tags : neidamangal ,shiwanga , Needamangalam, 2000 tons of rice bundles, sent to Sivagangai
× RELATED சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள...