டெல்லி: ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் 4வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஆளுங்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். அதானி குழும முறைகேடு தொடர்பாக விசாரணை கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.