மதுபோதையில் ஏடிஎம் எந்திரத்தை கடப்பாறையால் உடைக்க முயற்சி: கூலித்தொழிலாளிகள் இருவரை தேடும் தெலுங்கானா போலீஸ்..!!

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மதுபோதையில் ஏடிஎம் இயந்திரத்தை கடப்பாரையால் உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர். ஐதராபாத்தில் சைதன்யாபுரியில் உள்ள விக்டோரியா மினோரியால் மெட்ரோ ரயில் நிலையத்தில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரம் உள்ளது. அங்கு இரவு குடிபோதையில் வந்த இருவர் கையில் வைத்திருந்த கடப்பாறையால் இயந்திரத்தை பெயர்த்தெடுக்க முயன்றனர்.

அதற்குள்ளாக சத்தம் கேட்டு அங்கு திரண்ட பொதுமக்கள் இருவரையும் பிடிக்க முயற்சிக்கவே இருவரும் தப்பினர். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தியதில், கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இருவரும் கூலி தொழிலாளிகள் என தெரியவந்தது. மேலும் அவர்கள் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் அல்ல என உறுதி செய்த போலீசார், அவர்களை விரைவில் அடையாளம் கண்டு கைது செய்ய இருப்பதாக கூறியுள்ளனர்.

Related Stories: