துபாயில் உள்ள உலக புகழ்பெற்ற புர்ஜ் அல் அராப் ஹோட்டலின் மாடியில் சிறியரக விமானத்தை தரையிறக்கும் முயற்சி வெற்றி..!!

துபாய்: துபாயில் உள்ள உலக புகழ்பெற்ற புர்ஜ் அல் அராப் ஹோட்டலின் மாடியில் சிறியரக விமானத்தை தரையிறக்கும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. துபாயில் உள்ள சுமைரா கடற்கரையில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவில் கட்டப்பட்டுள்ளது உலக புகழ்பெற்ற புர்ஜ் அல் அராப் ஹோட்டல். உலகின் உயரமான கட்டிடங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த ஹோட்டல் துபாயின் முக்கியான சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.

இந்த ஹோட்டலின் மேல் தளத்தில் சிறியரக விமானத்தை தரையிறக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கடல் மட்டத்தில் இருந்து 920 அடி உயரத்தில் உள்ள ஹெலிபேடில் துபாயின் ரெட்புல் நிறுவனத்தின் சிறிய ரக விமானம் ஒன்று வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. எதிர்காலத்தில் குறிப்பிட்ட தொகை செலுத்திவிட்டு துபாய் விமான நிலையத்தில் இருந்து நேரடியாக புர்ஜ் அல் அராப்பின் மாடியில் இறங்க முடியும்.

Related Stories: