×

தமிழ்நாட்டில் பணிபுரியும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி அரசாணை வெளியீடு..!!

சென்னை: தமிழ்நாட்டில் பணிபுரியும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.12,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.15,000ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.18,000ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017, 20 மட்டும் 22 ஆகிய மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் முறையாக நிரப்பப்படும் வரை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படக்கூடிய இடைநிலை ஆசிரியர்களுக்கு 8,000 ரூபாயும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு 9,000 ரூபாயும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 10,000 ரூபாய் என்ற அளவில் கடந்த 2017ல் சம்பளம் கொடுக்கப்பட்டிருந்தது. தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் சம்பளம் உயர்த்தி வழங்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் வந்ததன் அடிப்படையில், பழங்குடியினர் நல இயக்குனர் அரசுக்கு எழுதப்பட்ட கடிதத்தில், துறையின் கீழ் செயல்படக்கூடிய தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றக்கூடிய 221 ஆசிரியர்கள் மற்றும் நிரப்பப்பட உள்ள 194 பணியிடங்களுக்கும் சேர்த்து புதிதாக வரக்கூடிய 415 தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு இடைநிலை ஆசிரியருக்கு 12,000 ரூபாயும், பட்டதாரி ஆசிரியருக்கு 15 ஆயிரம் ரூபாயும், முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கு 18 ஆயிரம் ரூபாயும் என சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அந்த கோரிக்கையை ஏற்று தற்போது திருத்தப்பட்ட ஊதியம் என்பது ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படக்கூடிய ஆசிரியர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்கப்படுவதாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையானது தெரிவித்திருக்கிறது. இதுவரை இந்த பள்ளிகளில் 221 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். புதிதாக 194 பேர் நியமனம் செய்யப்படவுள்ளனர். மொத்தமாக 415 தற்காலிக ஆசிரியர்களுக்கான சம்பளம் உயர்த்தி வழங்கப்படுவதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Tags : Adi Dravidian ,Tribal ,Tamil Nadu , Adi Dravidar, Tribal School, Temporary Teacher, Blockbudiyam
× RELATED குடும்ப பிரச்னையில் மனைவி அளித்த...