
சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை சீராக உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஓரிரு நாட்கள் மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு ஈவிகேஎஸ் இளங்கோவன்வீடு திரும்புவார் என தகவல் தெரிவித்தார்.