×

மியான்மரில் அதிகாரத்திற்கு நடக்கும் சண்டையால் அப்பாவி மக்கள் படுகொலை : மடாலயத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 29 பேர் பலி...

நய் பியி தாவ் : மியான்மரில் கிளர்ச்சி குழுக்கள் மற்றும் ராணுவத்திற்கு இடையே நடைபெற்று வரும் சண்டையில் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படுவது உலக நாடுகளுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கதையாகி வருகின்றன. தெற்கு ஷான் மாகாணத்தில் உள்ள ஒரு மடாலயத்தில் சிறுவர்கள், புத்த பிட்சுக்கள் உட்பட 29க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இராணுவமே பொறுப்பு என்று கிளர்ச்சி குழுக்களும் கிளர்ச்சி குழுக்களே காரணம் என்று இராணுவமும் மாறி மாறி குற்றம் சாட்டுகின்றனர்.

இதனிடையே தாக்குதல் நடந்த இடத்தில் ராணுவத்தினர் நேரில் ஆய்வு மேற்கொண்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மியான்மரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. ராணுவத்திற்கு எதிராக பல்வேறு கிளர்ச்சி குழுக்களும் சண்டையிட்டு வருகின்றன. இம்மாத தொடக்கத்தில் சகாயங் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மியான்மர் ராணுவத்தின் தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், மீண்டும் பொதுமக்களை  குறிவைத்து நடத்தப்பட்டு இருக்கும் தாக்குதல் உலக நாடுகளுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  


Tags : Myanmar , மியான்மர் ,படுகொலை,துப்பாக்கிச் சூடு
× RELATED அதிக தேர்தல் பத்திரங்கள் வாங்கிய...