×

கோயம்பேட்டில் வீடு ஒன்றின் மீது வைக்கப்பட்டிருந்த செல்போன் டவர் மாயமாகியதாக புகார்!!

சென்னை :  சென்னை கோயம்பேட்டில் வீடு ஒன்றின் மீது வைக்கப்பட்டிருந்த செல்போன் டவர் மாயமாகியுள்ளதாக, அந்நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 வருடங்களாக வாடகை தராததுடன், டவர் துருப்பிடித்து கீழே விழும் நிலையில் பராமரிக்கப்படாமல் இருந்ததால், அதன் பாகங்களை கழற்றி பழைய இரும்பு கடையில் விற்பனை செய்துவிட்டதாக இடத்தின் உரிமையாளர்கள் பதில் அளித்துள்ளனர்.


Tags : Coimpet , Koyambedu, house, cell phone, tower
× RELATED பசுமை நகராட்சி நிதிப்பத்திரம் மூலம்...