கொடைக்கான‌ல் ஏரியில் மித‌க்கும் நவீன ந‌டைபாதை

கொடைக்கானல்:  கொடைக்கான‌ல் ந‌க‌ரின் ம‌த்திய‌ப்ப‌குதியில் ந‌ட்ச‌த்திர‌ ஏரி அமைந்துள்ள‌து. இந்த ஏரியை சுற்றி ரூ.24 கோடியில் ப‌ல்வேறு அபிவிருத்தி பணிகள் நடந்து வருகிறது. சுமார் ரூ.5.80 கோடி புதிய படகு இல்லம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரூ.35 லட்சம் செலவில் தண்ணீரில் மிதக்கும் நவீன நடைபாதை, காற்ற‌டைக்க‌ப்ப‌ட்ட‌ பொருட்க‌ளால் அமைக்கப்பட்டு வருகிறது. சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பான முறையில் எளிதாக‌ நடந்து சென்று, படகு சவாரி மேற்கொள்வதற்காக இந்த வசதி செய்யப்படுகிறது. மேலும் 70க்கும் மேற்பட்ட புதிய படகுகளும் வாங்கப்பட உள்ளது. புதிய படகு இல்ல பணிகள் முடிக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகளின் பயன்பாட்டிற்காக விரைவில் திறக்கப்படும், இந்த தகவலை கொடைக்கானல் நகராட்சி பொறியாளர் முத்துக்குமார் தெரிவித்தார்.

Related Stories: