தேர்வு எழுதாத மாணவர்களின் எண்ணிக்கை விவகாரத்தில் அரசு வெளிப்படைத்தன்மையுடன் உள்ளது என்பது தெளிவாகிறது: கல்வியாளர் ராஜன் கருத்து

சென்னை: தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு 13ம் தேதி தொடங்கியது. இந்த தேர்வை 3 லட்சத்து 67 ஆயிரத்து 707 மாணவர்கள், 4 லட்சத்து 19 ஆயிரத்து 356 மாணவிகள் எழுத விண்ணப்பித்து இருந்தனர். முதல் நாள், தமிழ் தேர்வை 49 ஆயிரத்து 559 பேர் எழுதவில்லை. அதாவது, தாய் மொழியாம் தமிழ் தேர்வை சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் எழுதாதது தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு 4 சதவீதம் பேர் மட்டுமே தமிழ் தேர்வு எழுதவில்லை. ஆனால், இந்த ஆண்டு அது 6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கல்வியாளர்கள் உள்பட அனைத்து தரப்பிலும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு வருடமும் தேர்வில் இது வழக்கமாக இருக்கும் ஒன்றுதான். கொரோனாவிற்கு பிறகு தேர்வு எழுதாத மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது குறித்து கல்வியாளர் ராஜன் கூறுகையில், எந்த ஒரு வருடமும் இல்லாமல் நடப்பாண்டில் தமிழ் தேர்வு எழுதாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றால் அதற்கு அரசை குற்றம் கூறுவது தீர்வல்ல. சரியான எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்றால் அதற்கு இந்த அரசு வெளிப்படைத்தன்மையுடன் இருக்கிறது என்று தான் அர்த்தம். இதற்கு முன்னால் இருந்த அரசு, இவ்வளவு வெளிப்படை தன்மையுடன் மாணவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டது இல்லை. மேலும் கொரோனா கால கட்டத்தில், பல மாணவர்கள் கல்வியை தொடர முடியாமல் இடைநின்றனர். அவர்களை மீட்டு கொண்டுவர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

பல தனியார் பள்ளி மாணவர்கள், பள்ளி கட்டணம் செலுத்த முடியாமல் அரசு பள்ளிகளில் சேர்ந்தனர். எனவே, அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகமாகியது. வேலைக்கு சென்ற மாணவர்கள் குடும்ப கஷ்டத்திற்கான தங்கள் பணியை தொடர ஆரம்பித்து விட்டனர். இதன் காரணமாகவே, தேர்வு எழுதாத மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இந்த மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பினை வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது. எனவே அவர்கள் மீண்டும் தேர்வினை எழுதலாம்.

ஆண்டு    மொத்த தேர்வர்களின்

எண்ணிக்கை    தேர்வு எழுதாதவர்கள்

2019    8,42,512    47,364

2020    7,79,931    3,6760

2022    8,06,277    31,036

Related Stories: