×

மருத்துவமனையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அனுமதி

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா உயிரிழந்ததையடுத்து அந்த சட்டமன்ற தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி கட்சி, காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜூனா கார்கே, ராகுல்காந்தியிடம் வாழ்த்து பெறுவதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு மல்லிகர்ஜுனா கார்கே, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதையடுத்து நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று இரவு திடீரென அவரு்க்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.


Tags : EVKS Elangovan , EVKS Elangovan admitted to the hospital
× RELATED கூட்டணியில் இருந்ததால்தான்...