×

செக் குடியரசு துணை அமைச்சர் தமிழ்நாடு வருகை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: செக் குடியரசின் தலைநகர் பிராக்கில் செக் குடியரசின் மண்டல மேம்பாட்டு அமைச்சகத்தின் துணை அமைச்சர் ஜான் ப்ளூக்சா தலைமையிலான குழுவினரை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் சந்தித்து தமிழ்நாட்டின் சுற்றுலா சிறப்புகள் குறித்த புத்தகங்களை வழங்கி, செக்குடியரசு சுற்றுலா பயணிகள் தமிழ்நாட்டில் சுற்றுலா மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: ஜெர்மன் நாட்டின் தலைநகரான பெர்லின் நகரில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா சந்தையில்சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு செயலாளர் சந்தரமோகன், சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி ஆகியோர் கலந்து கொண்டு, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாத்துறை அமைச்சர்கள், சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்கள், பார்வையாளர்களிடம் தமிழ்நாட்டின் சுற்றுலா சிறப்புகள் குறித்த புத்தகங்கள், மடிப்பேடுகளை வழங்கி தமிழ்நாட்டில் சுற்றுலா மேற்கொள்ள அழைப்பு விடுத்து கவனம் ஈர்த்தனர்.  

இந்நிகழ்ச்சியையொட்டி நடைபெற்ற பசிபிக் பகுதி பயண எழுத்தாளர்கள் சங்க விருதுகள் வழங்கும் விழாவில் பாரம்பரிய சுற்றுலா இலக்கிற்கான பட்வா சர்வதேச பயண விருது தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறைக்கும், இந்திய அளவில் சிறந்த சுற்றுலா அமைச்சருக்கான பட்வா சர்வதேச பயண விருது சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனிடம் வழங்கப்பட்டது. சுற்றுலாத்துறை அமைச்சர்  தலைமையிலான குழுவினர் செக் குடியரசு நாட்டின் தலைநகரான பிராக்கில் செக் குடியரசின் மண்டல மேம்பாட்டு அமைச்சகத்தின் துணை அமைச்சர், ஜான்ப்ளூக்சா தலைமையிலான குழுவினரை சந்தித்து தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்களின் சிறப்புகள் குறித்து தெரிவித்ததுடன், அவற்றை உள்ளூர் செய்தி நிறுவனங்கள், சமூக வலைதளங்கள் மூலம் வெளியிடுவது குறித்த நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.

இந்நிகழ்வின்போது செக் குடியரசின் மண்டல மேம்பாட்டு அமைச்சகத்தின் துணை அமைச்சர், ஜான் ப்ளூக்சா தலைமையிலான குழுவினருக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனை தமிழ்நாட்டில் சுற்றுலா சிறப்புகள் குறித்த விவரங்களை வண்ண புபை்படங்களுடன் தெரிவிக்கும் புத்தகங்களை வழங்கினார். இந்த சந்திப்பின் போது செக்குடியரசின் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், தமிழ்நாட்டின் சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்கள் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் பயணத்திட்டங்கள்,, விழாக்கள் மற்றும் சுற்றுலா பொருட்காட்சிகளில் கலந்து கொள்வது குறித்தும் கலந்துரையாடினர்.

Tags : Deputy Minister ,Czech Republic ,Tamil Nadu , Deputy Minister of Czech Republic Visits Tamil Nadu: Tamil Nadu Govt
× RELATED இந்தியக்கொடியை அவமதித்த மாலத்தீவு...