சென்னை: தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளராக கவுசல் கிஷோர் பொறுப்பேற்று கொண்டார். தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளராக இருந்த மல்லையா ஐசிஎப்-இன் பொது மேலாளராக ஜனவரி மாதம் பொறுப்பெற்றுக்கொண்டார். இதை தொடர்ந்து இந்த பொறுப்பு முதன்மை தலைமை பொறியாளர் ஏ.கே.தத்தா கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று கவுசல் கிஷோர் கூடுதல் பொது மேலாளராக கவுசல் கிஷோர் பொறுப்பேற்று கொண்டார். 30 ஆண்டுக்கு மேலாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ரயில்வே துறையில் பணியாற்றுபவர்.தெற்கு ரயில்வேயில் பொறுப்பேற்பதற்கு முன்பாக வடக்கு எல்லை ரயில்வேயில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார். அப்போது இந்தியா வங்கதேசம் இடையேயான ரயில் பாதை அமைக்கும் பணிக்கு தலைமை வகித்தவர். சிங்கப்பூர், மலேசியா, இத்தாலி உள்ளிட்ட வெளிநாடுகளில் பல்வேறு பயிற்சி நிகழ்வுகளில் பங்கேற்று உள்ளார்.