காதலனால் புரோக்கரான மாணவியின் தூண்டுதலால் பாலியல் தொழிலில் இறங்கிய இன்ஜி. மாணவிகள்: ரூ.3 ஆயிரத்துக்காக ஆசைப்பட்டது அம்பலம்; சென்னை, புதுச்சேரியில் பல லட்சம் சம்பாதித்து ஆடம்பரமாக இருந்தனர்

சென்னை: காதலனால் பாலியல் புரோக்கராக மாறிய இன்ஜினியரிங் மாணவி ஒருவர், தன்னுடன் படிக்கும் சக மாணவிகளுக்கு பணம், பொருள், சுற்றுலா ஆசை வார்த்தைகளை கூறி, 3 ஆயிரம் ரூபாய் கொடுத்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எழும்பூர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில், கல்லூரி மாணவிகள் அடிக்கடி வந்துபோவதாக, விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில், கடந்த 13ம் தேதி சம்பந்தப்பட்ட தனியார் விடுதியில் சோதனை நடத்தினர். அப்போது, புதுச்சேரி சிவராந்தகம் பேட்டையை சேர்ந்த பெண் புரோக்கர் மற்றும் அவரது காதலன் பிரகாஷ் இருவரும் போலீசில் சிக்கினர். அதைதொடர்ந்து விபச்சார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பிரபு, பெண் புரோக்கர் மற்றும் பாலியல் ெதாழிலுக்கு உடந்தையாக இருந்த கீழ்ப்பாக்கம் முதல் தெருவை சேர்ந்த பிரேம்தாஸ்(30) என்பவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பெங்களூரு, மும்பை, தர்மபுரியை சேர்ந்த 3 இளம் பெண்கள் மீட்கப்பட்டனர். முக்கிய குற்றவாளியான பெண் புரோக்கரின் காதலன் பிரகாஷை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இளம் பெண், புரோக்கரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல அதிர்ச்சி சம்பவங்கள் வெளியானது.

பெண் புரோக்கரிடம் நடத்திய விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: பாலியல் வழக்கில் கைதான ெபண், புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர். இவர் 12ம் வகுப்பு படிக்கும் போது, பேஸ்புக் மூலம் சென்னையை சேர்ந்த பிரகாஷ் 4 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமாகி, அது காதலில் முடிந்தது. இதன் பிறகு, இருவரும் பல இடங்களில் தங்கி உல்லாச வாழ்க்கை அனுபவித்துள்ளனர். பின்னர் காதலன் பிரகாஷ் யோசனைப்படி, இளம் பெண் நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரி ஒன்றில், இன்ஜினியரிங் 3ம் ஆண்டு தற்போது படிக்கிறார். ஏற்கனவே பிரகாசுக்கு பாலியல் தொழிலில் அனுபவம் இருந்தது. இதனால், கல்லூரி மாணவி மூலம், கடந்த 2 ஆண்டுகளாக தனியாக பாலியல் தொழில் செய்து வருகிறார்.

தனது காதலன் யோசனைபடி, கடன் தேவைப்படும் மாணவிகளுக்கு, புரோக்கராக செயல்பட்ட கல்லூரி மாணவி காதலனிடம் இருந்து பணம் வாங்கி தந்துள்ளார். ஒரு கட்டத்தில் கடன் வாங்கிய பணத்தை திருப்பி தர வேண்டாம். அதற்கு பதிலாக, வாங்கிய கடனுக்கும் அதிகமாக பணம் தருகிறேன். பாதுகாப்பான முறையில் பாலியல் தொழில் செய்தால் வருவாய், படிப்பு 2க்கும் பிரச்னை வராமல் பார்த்து கொள்கிறேன் என்று மாணவிகளுக்கு வலை விரித்தார். அதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்து, கல்லூரி நேரம் போக மற்ற நேரங்களில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

அந்த வகையில், கடந்த 2 ஆண்டுகளில் தன்னுடன் கல்லூரியில் தங்கி  படிக்கும் பல மாணவிகளை மூளைசலவை செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினார். பிரகாஷின் காதலிக்கும் நல்ல கமிஷன் கிடைத்ததால், அவர் ஆடம்பர வாழ்க்கை வாழ ஆரம்பித்தார். பிரகாஷின் பெரும்பாலான வாடிக்கையார்கள் கல்லூரி பெண்களையே கேட்டதால், ஒரு இரவுக்கு ரூ.25 ஆயிரம் மூலம் ரூ.30 ஆயிரம் பணம் வசூலித்தார். அதில் ரூ.3 ஆயிரத்தை மட்டும் கல்லூரி மாணவிகளுக்கு கொடுத்துவிட்டு, லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டினாராம்.   

பிரகாஷ் வாடிக்கையாளர்களிடம் வாங்கும் பணத்தை, தனது காதலியான மாணவிக்கு ‘ஜிபே’ மூலம் அனுப்பியுள்ளார். அந்த ஆதாரங்கள் பிரகாஷின் காதலியான மாணவியின் செல்போனில் சிக்கியுள்ளது. அப்பாவி கல்லூரி மாணவிகளை பயன்படுத்தி, பிரகாஷ் ஒரு மாதத்திற்கு ரூ.10 லட்சம் வரை சம்பாதித்துள்ளார். மேலும், இவர்கள் இரண்டு ஆண்டுகளாக பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கல்லூரி மாணவியை கைது செய்துவிட்டோம். அவரின் காதலன் பிரகாஷை தலைமறைவாகிவிட்டார். கல்லூரி மாணவி மூலம் பாதித்த மாணவிகள் பட்டியலை தயாரித்து, தற்போது விசாரணை நடந்து வருகிறது.  

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

* பாலியல் மாணவி சிக்கியது எப்படி?

பாலியல் வழக்கில் குற்றவாளிகளான இளம் பெண்கள் நீதிமன்ற உத்தரவுப்படி அரசு மகளிர் காப்பகத்தில் போலீசார் அடைத்தனர். அதன்படி கடந்த மாதம் தனியார் விடுதி ஒன்றில் நடந்த பாலியல் வழக்கில் தர்மபுரியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில், என்னை கல்லூரி மாணவி ஒருவர் தான், இந்த தொழிலுக்கு அழைத்து வந்ததாகவும், அவர் தற்போது கல்லூரி ஒன்றில் படித்து வருவதாக விசாரணையின் போது விபச்சார தடுப்பு பிரிவு போலீசாரிடம் கூறினார். அதன் பிறகு போலீசார் ஆலோசனைப்படி தர்மபுரி இளம் பெண், காப்பத்தில் இருந்து வெளியே வந்த பிறகு, மீண்டும் பாலியல் புரோக்கரான கல்லூரி மாணவியிடம் தொடர்பு ஏற்படுத்தி, அதன் மூலம் கல்லூரி மாணவியை எழும்பூரில் தனியார் விடுதியில் பாலியல் தொழில் செய்யும் போது, விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் பொறி வைத்து கல்லூரி மாணவியை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

Related Stories: