×

கிராம தன்னாட்சி திட்டத்தில் நிதி ஒதுக்கீடு நிறுத்தம்: ஒன்றிய அரசுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு கண்டனம்

புதுடெல்லி:   ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைக்கான  நாடாளுமன்ற நிலைகுழு தனது அறிக்கையை மாநிலங்களவையில் சமர்ப்பித்துள்ளது. அதில், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளை வலுப்படுத்த தேசிய கிராம தன்னாட்சி திட்டம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் 19  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 2023-23ம் நிதியாண்டுக்கான திட்ட நிதி வழங்கவில்லை. அதே போல் 2021-22ம் நிதியாண்டிலும் 9 மாநிலங்கள்,யூனியன் பிரதேசங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. நிதி ஒதுக்கீட்டை நிறுத்துவதால் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை பலப்படுத்துவதற்கான இந்த திட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். பெரும்பாலான கிராம பஞ்சாயத்துகளுக்கு கம்ப்யூட்டர்கள் வழங்கப்படவில்லை. மொத்தம் உள்ள 2 லட்சத்து 71 ஆயிரத்து  102 பஞ்சாயத்துகளில் 2 லட்சத்து 19 ஆயிரத்து  889 பஞ்சாயத்துகளில் மட்டும்  கம்ப்யூட்டர்கள் உள்ளன என கூறப்பட்டுள்ளது.



Tags : Parliamentary Standing Committee ,Union Govt , Suspension of fund allocation in Village Autonomy Scheme: Parliamentary Standing Committee condemns Union Govt
× RELATED NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின்...