×

சிலிக்கான்வேலி, சிக்னேச்சர் வங்கியை தொடர்ந்து அமெரிக்காவில் மேலும் ஒரு வங்கி மூடல்?: பங்குகள் சரிந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

வாஷிங்டன்: அமெரிக்க  வங்கிகளின் பங்கு வர்த்தகம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் அமெரிக்காவில்  கடந்த ஒரு வாரத்தில் மூன்றாவதாக மேலும் ஒரு வங்கி மூட வாய்ப்புள்ளதாக ஆய்வில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 அமெரிக்காவில் கடந்த சில  நாட்களுக்கு முன் மிகவும் பழமையான ‘சிலிக்கான் வேலி’ வங்கி மூடப்பட்டது.  அதற்கு அடுத்த சில நாட்களில் ‘சிக்னேச்சர்’ வங்கி மூடப்பட்டது. தற்போது  ‘பர்ஸ்ட் ரிபப்ளிக்’ வங்கியும் மூடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  சர்வதேச  ெபாருளாதார ஆய்வுகட்டுரைகளை வெளியிடும் ‘ப்ளூம்பெர்க்’ நிறுவனத்தின்  கூற்றுப்படி, ரிபப்ளிக் வங்கியின் பங்குகள் 67% அளவிற்கு சரிந்துள்ளன. சிலிக்கான்  வேலி வங்கிக்கும், சிக்னேச்சர் வங்கிக்கும் ஏற்பட்ட நெருக்கடி மற்றும்  வர்த்தக வீழ்ச்சியால் ‘பர்ஸ்ட் ரிபப்ளிக்’ வங்கியின் பங்குகள்  வீழ்ச்சியடைந்தன.  மொத்தம் 6 அமெரிக்க வங்கிகள் நெருக்கடியில்  சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் முதல் இடத்தில்  ‘பர்ஸ்ட் ரிபப்ளிக்’ வங்கி உள்ளது. இது தவிர, ஜியான்ஸ் பான்கார்ப்,  வெஸ்டர்ன் அலையன்ஸ் பான்கார்ப், கொமெரிகா இன்க், யுஎம்பி பைனான்சியல்  கார்ப் மற்றும் இன்ட்ரஸ்ட்  பைனான்சியல் கார்ப்பரேஷன் ஆகிய வங்கிகளும்  நெருக்கடியில் சிக்கியுள்ளன.  அமெரிக்க வங்கிகள் ஒன்றன் பின் ஒன்றாக  மூடப்பட்டு வருவதால், கடந்த 2008ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையை  அமெரிக்கா எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  அமெரிக்க வங்கிகளின் வீழ்ச்சியை  உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்க அதிபர் மாளிகையும் அறிக்கை  வெளியிட்டுள்ளது.




Tags : Silicon Valley ,Signature Bank ,US , Silicon Valley, Signature Bank followed by yet another US bank closure?: Shares fall, customers rattled
× RELATED அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய...