×

சென்னை ராமாபுரத்தில் பிரதான குழாயினை இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 18.03.2023 அன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம்: குடிநீர் வாரியம் தகவல்

சென்னை: ராமாபுரம் விரிவான குடிநீர் வழங்கல் திட்டத்தின் கீழ், குறிஞ்சி நகர் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியின் 700மி.மீ. விட்டமுள்ள உந்து குழாயுடன் மவுண்ட்- பூந்தமல்லி சாலையில் உள்ள சாந்தி காலனி மற்றும் டி.எல்.எப். சந்திப்பில் 1500 மி.மீ. விட்டமுள்ள பிரதான குழாயினை இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 18.03.2023 அன்று காலை 6 மணி முதல் 19.03.2023 காலை 6 மணி வரை பகுதி 7, 8 ,9, 10, 11, 12 மற்றும் பகுதி 13 உட்பட்ட பகுதிகளில் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் சென்னை குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் (Dial for Water) குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர்


Tags : Ramapuram, Chennai , Ramapuram, main pipeline, connecting work, drinking water supply, stoppage, drinking water board, information
× RELATED உடல் உறுப்பு தானம் வழங்கியவர் உடலுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அஞ்சலி