தமிழ்நாடு டென்னிஸ் வீராங்கனை ஹரிதாஸ்ரீ, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்..!

திருவாரூர்: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, மலேசியாவில் நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி தகுதி இறுதிச் சுற்றுப் போட்டிக்கு 14- வயதுப்பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ள, தமிழ்நாடு டென்னிஸ் வீராங்கனை ஹரிதாஸ்ரீ, 14.03.2023 அன்று திருவாரூர், அரசு விருந்தினர் மாளிகையில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, 2023 மார்ச் 20 முதல் 27 வரை மலேசியாவில் நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி தகுதி இறுதிச் சுற்றுப்போட்டிக்கு 14 வயதுப்பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு டென்னிஸ் வீராங்கனை ஹரிதாஸ்ரீ, 14.03.2023 அன்று திருவாரூர், அரசு விருந்தினர் மாளிகையில் சந்தித்து வாழ்த்து பெற்றார். ஹரிதாஸ்ரீ அகில இந்திய டென்னிஸ் அசோசியேசன் சார்பில் 2022 – அக்டோபரில் டெல்லியில் நடைபெற்ற, டென்னிஸ் போட்டியில் 14- வயதுக்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.

ஏற்கெனவே 2021-ல் பாகிஸ்தானில் நடைபெற்ற உலக அளவிலான டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 12- வயதுக்குட்பட்ட பிரிவில் தங்கமும், அதே ஆண்டு கஜகஸ்தானில் நடைபெற்ற போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார். இவர் இந்திய டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் 14- வயதுக்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனையாக உள்ளார். மேலும் 2023-ஆம் ஆண்டு ஆசிய அளவிலான தரவரிசைப் பட்டியலில் 16- வயதுக்குட்பட்ட பிரிவில் 3- வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: