×

சென்னை பெருநகரில் ஒருநாள் சிறப்பு தணிக்கையின் போது 12.48 கிலோ கஞ்சா பறிமுதல்: 17 பேர் கைது

சென்னை: சென்னை பெருநகரில், காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் சம்பந்தமாக ஒரு நாள் சிறப்பு சோதனை மேற்கொண்டு, 10 வழக்குகள் பதிவு செய்து 17 குற்றவாளிகள் கைது செய்துள்ளனர். 12.48 கிலோ கஞ்சா, 60 கிராம் மெத்தம்பெட்டமைன், 4 இருசக்கர வாகனங்கள் மற்றும் ரொக்கம் ரூ.12,000 பறிமுதல் செய்துள்ளனர். மேலும் போதை வழக்குகளில் கைதான 5 குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், 01 குற்றவாளியிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெற்றும், 01 குற்றவாளியிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெற ஆயத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
 
போதையில்லா தமிழகம்’’ என்ற திட்டத்தினை அமல்படுத்தி, சென்னை பெருநகரில் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கை (Drive Against Drugs (DAD) என்ற சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, கஞ்சா கடத்தி வருபவர்கள், பதுக்கி வைப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் கண்காணித்து கைது செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கை (Drive Against Drugs (DAD) மேற்கொள்ளவும் உத்தரவிட்டதன் பேரில், நேற்று (14.03.2023) கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு எதிராகவும், கஞ்சா வழக்கு குற்றவாளிகள் மீதும் ஒரு நாள் சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நேற்று (14.03.2023) நடைபெற்ற சோதனையில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்து, 17 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 12 கிலோ 480 கிராம் கஞ்சா, 60 கிராம் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள், 4 இருசக்கர வாகனங்கள் மற்றும் ரொக்கம் ரூ.12,000 பறிமுதல் செய்யப்பட்டது.

நேற்று (14.03.2023) ஒரே நாளில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 315 குற்றவாளிகள் நேரில் சென்று கண்காணித்து, மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும், 01 குற்றவாளியிடம் திருந்தி வாழ்வதற்கு நன்னடத்தை பிணை ஆவணம் பெற்றும் 01 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெற ஆயத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. கடந்த 17.09.2022 முதல் 13.03.2023 வரை கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய  542 குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று (14.03.2023) ஒரே நாளில் மட்டும் 5 கஞ்சா வழக்கு குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டது.   

காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பிற்காக, பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சென்னை பெருநகரில் போதை பொருட்கள் மற்றும் குட்கா புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு இது போன்ற சிறப்பு சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Tags : Chennai Metropolis , 12.48 kg ganja seized during day-long special audit in Chennai Metropolis: 17 arrested
× RELATED ஊர்க்காவல் படையினருக்கு...