×

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் மார்ச் 17ம் தேதி முதல் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்கள் தங்கள் ஹால்டிக்கெட்களை அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; நடைபெறவுள்ள ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுத ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தத்கல் உட்பட) 17.03.2023 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான, தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்யும் முறை
தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று HALL TICKET என்ற வாசகத்தினை Click செய்தால் தோன்றும் பக்கத்திலுள்ள “SSLC PUBLIC EXAMINATION APRIL 2023 HALL TICKET DOWNLOAD”என்ற வாசகத்தினை “Click” செய்து தோன்றும் பக்கத்தில், தங்களது விண்ணப்ப எண்/ நிரந்தரப் பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் 20.03.2023 முதல் 24.03.2023 வரை, அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெறவுள்ளன.

அறிவியல் பாட செய்முறைத்தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தனித்தேர்வர்கள் செய்முறைப் பயிற்சி பெற்ற பள்ளி தலைமையாசிரியரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். ஏப்ரல் 2023 பொதுத்தேர்விற்கான கால அட்டவணையை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : Directorate of Government Examinations , Individual Candidates who applied for Class 10 Public Examination can download Admit Card from 17th March: Directorate of Government Examinations Notification
× RELATED பொதுத்தேர்வு பணிகளில் ஈடுபட...